முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளராக செயற்படும் நெவில் என்பவர் 5 வருடங்களுக்கு சிறப்பான முறையில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்ட ஒருவராகும். மஹிந்த மற்றும் நாமல் ராஜபக்சவின் அனைத்து மோசடி நடவடிக்கைகளையும் திட்டமிட்ட இருவரை, மஹிந்த மற்றும் நாமல் சிறப்பாக கவனித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சொத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு ஆஜராகுமாறு கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் தங்கள் மோசடிகள் வெளியாகும் என்ற பயத்தில் அதனை புறக்கணித்து வந்துள்ளார். டேசி பாட்டிற்கு பணம் கிடைத்ததனை போன்று இவ்வளவு சொத்துக்களை இவருக்கு வழங்குவதற்கு ராஜபக்சர்களுக்கு யாரிடம் இருந்து பணம் கிடைத்தது? என்பது தொடர்பில் ஆராயந்து வந்த போது உண்மை தெரியவந்துள்ளது. ராஜபக்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி கொடுக்கல் வாங்கல் பணம் உட்பட நெவிலின் வங்கி கணக்கில் வைப்பு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மஹிந்தவின் நிழலில் இருந்து மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இவருக்கு தண்டனை கிடைக்கும் வரையில் மக்கள் பார்த்துக் கொண்டுள்ளார்கள் என்பதனை ராஜபக்சர்கள் மறந்து விட கூடாது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்