பெஸ்தாரி ஜெயா சிஐஎம்பி வங்கி விரைவில் மூடப்படும் என்ற அறிவிப்பால் வட்டார மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்கள் என்று மஇகா ரூமா மூரா பத்தாங் பெர்ஜுந்தை கிளைத் தலைவர் சி.எம்.ரமேஸ் தெரிவித்தார். இங்கு வாழும் ஏறத்தாழ 5,000 மக்களுக்கு இத்தகைய மூடு விழா பெரிதும் சிரமங்களைக் கொண்டு வரும். நாள்தோறும் பெருகி வரும் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய இவ்வட்டாரத்தில் போதிய வங்கி சேவைகள் இருப்பது அத்தியாவசியம். பிஎஸ்என் மற்றும் அம் பேங்க் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையினை வழங்கிட இயலாது. ஒரு வங்கி மூடப்படும் வேளையில் இருக்கின்ற இதர இரண்டு வங்கிகளில் பெரும் நெரிசல் ஏற்படும். இதனால் ஏடிஎம் மூலம் பணம் மீட்கவும் இதர வங்கிப் பணிகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இர்முஷாமி இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார். ரமேஸ் மகஜர் வடிவில் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர்களிடம் வழங்கினார்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்