அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியி டுகின்றனர். அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இருவரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர். தங்கள் கருத்துகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர். இதுவரை இருவரும் நேருக்கு நேராக மோதும் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், நேரடி விவாதம் இன்று, 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நேரடி விவாதம் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக இன்று நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்டரா பல்கலைக்கழகத்தில் இரவு 9 முதல் 10.30 மணி வரை விவாதம் நடக்கிறது. அதில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளின் கீழ் நேரடியாக பேசி கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஹிலாரி-டிரம்ப் மோதும் நேரடி விவாதம் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதை அமெரிக்க மற்றும் அனைத்துலக நாடுகளை சேர்ந்த 10 கோடி மக்கள் கண்டு களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் மூலம் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை செய்யாமல் இருக்கும் அமெரிக்க வாக்காளர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என கருதப்படுகிறது. கடந்த 1960-ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதுதான் முதன் முறையாக ஒரு பெண் போட்டியிடுகிறார். எனவே, இன்று நடைபெறும் இந்த நேரடி விவாதம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்