தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றத்தை நிறுத்தக்கோரி வடக்கு மாநில முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 2009-ஆம் ஆண்டு மே மாதம் இறுதி கட்டப்போர் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இதன் பிறகு இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்று ஸ்ரீசேனா அதிபர் ஆனார். இதனால் வடக்கு மாநில தமிழர்கள், தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று கருதினர். ஆனால் ஸ்ரீசேனா அரசு அமைந்து பல ஆண்டுகள் கடந்தும் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து வடக்கு மாநில முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று முன் தினம் மதியம் கொளுத்தும் வெயிலில், யாழ்ப்பாணம் நகரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மக்கள் தேசிய முன்னணி அமைப்பு விடுத்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள், ‘சிங்களர்களை தமிழர் பகுதிகளில் குடியேறச் செய்வதை இலங்கை அரசு நிறுத்தவேண்டும். தமிழர்கள் வசிக்கும் பகுதியில் புத்த மத கோவில்களை கட்டக் கூடாது. போரின்போது தமிழர்களிடம் கைப்பற்றிய நிலங்களை மீண்டும் ஒப்படைக்கவேண்டும். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். இதே கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஊர்வலத்தில் ஏந்திச் சென்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசும்போது, போர் முடிந்து 7 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனாலும் தமிழர்களின் குறைகளுக்கு இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என்றார். ஸ்ரீசேனா அரசு பதவியேற்ற பிறகு, வடக்கு மாநிலத்தில் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்