img
img

இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கண்டிப்பு
சனி 16 டிசம்பர் 2017 14:24:23

img

கொழும்பு, 

இலங்கையில், கடந்த 1979–ம் ஆண்டு, பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம், பயங்கரவாதத்துக்கு உதவுவதை தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, எந்த விசாரணையும் இன்றி, 18 மாதங்கள் வரை காவலில் வைத்திருக்க போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதை பயன்படுத்தி, தமிழர்கள் பலர் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால், போர் முடிந்த பிறகும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சட்டவிரோத காவல் தொடர்பான ஐ.நா. பணிக்குழு உறுப்பினர் லெய் டூமே, 11 நாட்களாக இலங்கையில் தங்கி இருந்து ஆய்வு செய்தார். நேற்று அவர் கொழும்புவில் பேட்டி அளித்தபோது, விசாரணையின்றி சட்டவிரோதமாக தமிழர்களை காவலில் வைப்பதை கைவிடுமாறு இலங்கை அரசை வற்புறுத்தினார்.

மேலும், பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு பதிலாக, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார். இலங்கை யில் தனிநபர் சுதந்திரத்துக்கு சவால்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img