போஸ்னியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவத் தளபதி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிராகரித்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.போஸ்னியா நாட்டில் 1992 - 1995-ம் ஆண்டுகளில் நடந்த போரின்போது, போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டின் முன்னாள் தளபதி ஸ்லோபோடன் பிராஜில்க் உள்ளிட்ட 6 ஆறுபேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்லோபோடன் பிராஜில்க் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்லோபோடன் உள்ளிட்ட ஆறு பேர் போர்க் குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டு அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது.