வடகொரியா நேற்று இரவு நடத்திய ஏவுகணைச் சோதனைகுறித்து அமெரிக்க அதிபர் அளித்துள்ள பேட்டியில், “நான் பாத்துக்கறேன்...” எனப் பதிலளித்தி ருக்கிறார்.
உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணைச் சோதனைகள், அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானுக்கும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இந்த விஷயத்தில் கடும் மோதல் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோர் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று வடகொரியா மீண்டுமொரு ஏவுகணையைப் பரிசோதித்துப் பார்த்துள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் இந்த ஏவுகணை வீசப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் இதை உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் அளித்துள்ள பேட்டியில், “தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடகவே வடகொரியா உள்ளது. அதை, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கவனித்துவருகின்றன. இது போன்றதொரு இக்கட்டான நிலைமையை அமெரிக்க துணிந்து எதிர்கொள்ளும். தொடர்ந்து சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளித்துவரும் வட கொரியாவை இனி நான் பார்த்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்