லாஸ்வேகாஸ்
தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்த 22 வயதாகும் டெமி லெய்க் நெல் பீட்டர்ஸ் 2017-ம் ஆண்டிற்கான மிஸ்யுனிவா்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சோ்ந்த 92 போட்டி யாளா்கள் பங்கேற்றனா். முதலிடத்தை தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்த டெமி லெய்க்கும், இரண்டாவது இடத்தை கொலம்பியா நாட்டு அழகியும், மூன்றா வது இடத்தை ஜமைக்கா நாட்டுப்பெண்ணும் தட்டிச்சென்றனர். பிளானெட் ஹாலிவுட் ரிசார்ட் அண்ட் கேசினோ என்ற இடத்தில் நடைபெற்றது இந்த 66-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி.
இதில் பங்கேற்ற அழகிகளுக்கு அறிவுத் திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின் இறுதி சுற்றுக்கு 10 அழ கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயதான நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார். இவருக்கு 2016-ல் பட்டம் வென்ற பிரான்சை சேர்ந்த பிரபஞ்ச அழகி ஐரீஸ், மகுடம் சூட்டினார். மிஸ்யுனிவர்ஸ் பட்டம் வென்ற டெமி லெய்க் நெல் பீட்டருக்கு நியூ யார்க் நகரில் அபார்ட்மென்ட் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்