பூமியின் சுழற்சியின் வேகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், அவை கடுமையான பூகம்ப நடவடிக்கைகளை தூண்டிவிடும் வகையில் உள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.சுழற்சியின் ஏற்ற இறக்கங்கள் சிறியதாக இருந்தாலும், ஒரு நாளின் நீளத்தை ஒரு மில்லிசெகன்டில் மாற்றினால், அவை பரந்த அளவிலான நிலத்தடி ஆற்றலை வெளியிடுவதற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ரோஜர் பில்ஹாம் கூறியதவாது:-
புவியின் சுழற்சி மற்றும் பூகம்ப செயல்பாடு ஆகியவற்றிற்கும் இடையிலான தொடர்பு வலுவானது, இது அடுத்த ஆண்டு கடுமையான பூகம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகிறது.பூமியின் சுழற்சியை சற்று மாற்றுவது - ஒரு மில்லிசெகன்டில் ஒரு நாளில் சில நேரங்களில் - அந்த அணு கடிகாரங்களால் மிகவும் துல்லியமாக அளவிட முடியும் என கூறினார்
விஞ்ஞானிகள் இந்த முடிவிற்கு வர, அது 1900 முதல் ஏற்பட்ட ஏழு பெரிய அளவிலான பூகம்பங்களை ஆய்வு செய்து உள்ளனர்.மற்ற நேரங்களில் ஒப்பி டும்போது அவை ஐந்து காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பெரிய பூகம்பங்கள் இருந்து உள்ளன. என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
கடந்த நூற்றாண்டிலும் அரை நூற்றாண்டிலும் பூமி சுழற்சி பல மடங்கு அதிகமாக குறைந்துவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறான கால இடைவெளிகளால், அதிக சக்தி கொண்ட பூகம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. புவியின் சுழற்சி சிறிது குறைந்துவிட்டால், பூகம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்டது.