அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷிஃபாலி ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான ஷிஃபாலி ரங்கநாதன் சியாட்டிலில் பொதுப்போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்ட மைப்பின் செயல் இயக்குநராகப் பணியாற்றிவந்தார். தற்போது சியாட்டில் நகர துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷிஃபாலியின் தந்தை பிரதீப் ரங்கநாதன். தயார் செரில். ஷிஃபாலி நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விலங்கியலில் இளங்க லைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அண்ணா பல்லைக்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
2001-ம் ஆண்டில் அமெரிக்கா சென்று அங்குள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கு அரசு வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. சியாட்டில் போக்குவரத்துக் கொள்கை வகுப்புக் கூட்டமைப்பில் இயக்குநராக வேலைக்குச் சேர்ந்த அவர் 2014-15-ம் ஆண்டில் செயல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், துணை மேயர் கௌரவம் அவரைத் தேடி வந்துள்ளது.
ஷிஃபாலியின் கடின உழைப்பும், முயற்சிகளுமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருப்பதாக மகளை நினைத்து மகிழ்கிறார் தந்தை பிரதீப் ரங்கநாதன்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்