திங்கள் 18, நவம்பர் 2019  
img
img

பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு வியாழக்கிழமை வீர வரவேற்பு
செவ்வாய் 20 செப்டம்பர் 2016 12:33:52

img

வியாழக்கிழமை நாடு திரும்பும் மலேசிய பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்குக் கோலாகலமான வரவேற்பு காத்திருக்கிறது. அவர்கள் பிற்பகல் மணி 2-க்கு கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்துசேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பூங்கா ராயா வளாகத்தில் அவர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். அதன்பின் அவர்கள் ஜாலான் துன் ரசாக்கிலிருந்து ஜாலான் அம்பாங்கில் உள்ள கேஎல்சிசி-க்குத் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர் என இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். கேஎல்சிசி பெட்ரோனாஸ் பில்ஹார்மோனிக் மண்டபத்தில் சற்று நேரம் இருந்து விட்டு ஊர்வலம் ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் ராஜா சோழன் வழியாக பெவிலியன் மால் நோக்கிச் செல்லும். அங்கிருந்து கம்போங் பாண்டானில் உள்ள பாராலிம்பிக்ஸ் விளையாட்டு மையத்தில் ஊர்வலம் முடிவுக்கு வரும் என்றாரவர். “மலேசியர்கள் இந்த அசாதாரண விளையாட்டு வீரர்கள் வெற்றிகரமாக திரும்பியதைக் கொண்டாட வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என கைரி அவரது முகநூல் பக்கத்தில் கூறினார். ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் மலேசிய வீரர்கள் மூன்று தங்கம், ஒரு வெண்கலம் வென்று பெருஞ் சாதனை புரிந்தார்கள்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
கோர விபத்து! இரண்டு மாத கைக் குழந்தை தாயின் மடியில் மரணம்!

நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை ...

மேலும்
img
14 ஆண்டுகளில் 256 பேர் போலிஸ் காவலின்போது மரணம்?

போலீஸ் காவலின் போது மரணமடையும் ..

மேலும்
img
எம்எச் 370 தேடுதல் படலம் தொடருமா -தொடராதா?

எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன

மேலும்
img
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! 200க்கும் மேற்பட்டோர் பத்துமலையில் திரண்டனர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img