ஜிம்பாப்வேயில் அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக ராணுவம் புரட்சியில் இறங்கியுள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் சுமார் 5 சகாப்தங்களாக அதிபராக பதவி வகிக்கும் ராபர்ட் முகாபே, அண்மையில் துணை அதிபரை பதவி நீக்கம் செய்தார். இதனால் அதிருப்தியடைந்த ராணுவம் துணை அதிபருக்கு ஆதரவாக புரட்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜிம்பாப்வே அரசு ஊடகத்தை ராணுவம் கைப்பற்றி யுள்ளது. அந்நாட்டு தலைநகரில் ராணுவ டாங்குகள் அணிவகுத்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இது பற்றி பேசிய அந்நாட்டு ராணுவ அதிகாரியான சிவேங்கா, புரட்சியை பாதுகாக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயங்காது என்றார். அரசை கைப்பற்றும் நோக்கம் இல்லை என்றும், குற்றவாளிகளை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதிபர் முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.
ராணுவ தளபதியான சிவேங்கா உதவியடன் ஆட்சியை கைப்பற்ற துணை அதிபர் எமர்சன் முயற்சிப்பதாக ஜிம்பாப்வேயிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் குழப்பம் காரணமாக ஜிம்பாப்வேயில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்குள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்