ஈரான் - ஈராக் எல்லையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி நேற்றிரவு 9.18 மணியளவில் ஈராக் பகுதியில் இருக்கும் சுலைமணியா நகரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 50 நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் ஈரானின் மேற்கு கெர்மான்ஷா மாகாணத்துக்குத்தான் அதிக சேதம். கெர்மான்ஷா மாகாணம் ஈரான் -ஈராக் நாடுகளை பிரிக்கும் சக்ரோஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ஈரானின் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் பெரும்பாலும் செங்கற்களால் கட்டப்பட்டது என்பதால் நிலநடுக்கத்தைத் தாங்காமல் எளிதில் இடிந்துவிழும் தன்மை உடையது. இதன்காரணமாக நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஈரானின் கெர்மான்ஷா மாகாணம் திக்குமுக்காடிவிட்டது. இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புக்குழு இன்னும் தேடி வருகிறது. ஈரான் நகருக்கு நிலநடுக்கம் புதிதல்ல. கடந்த 2003-ம் ஆண்டு பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 26,000 பேர் பலியானார்கள். அதன்பிறகு, பலதடவை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ஈராக் நகரையும் விட்டுவைக்கவில்லை. ஈராக் எல்லையில் அமைந்துள்ள இர்பில் நகர் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
நிலநடுக்கம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இர்பில் நகரவாசிகள் ‘நேற்றிரவு திடீரென பெரும் சத்தம் கேட்டது. நாங்கள் தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்துகின்றனர். மிகப்பெரிய வெடிகுண்டை வீசி சென்றுவிட்டனர் என்றுதான் முதலில் நினைத்தோம். வீட்டின் வெளியே வந்து பார்த்த பிறகுதான் நிலநடுக்கத்தை உணர்ந்தோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
ஈரான்-ஈராக் எல்லைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலஅதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக உள்நாட்டு புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் மக்கள் வீடுகளைவிட்டு சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு தற்போது கடுமையான குளிர் நிலவிவருகிறது. இதனால் ஈரான்-ஈராக் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளும் செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்