கொழும்பு: கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது அப்பாவி தமிழர்களை கொன்ற இலங்கை ராணுவ வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகவே இதுவரை பேசி வந்த சிறிசேனா, முதல் முறையாக ராணுவத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தினரால் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா புள்ளிவிவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனா தற்போது சில கருத்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரில் தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இறுதிகட்ட போரின் போது ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இதை மனசாட்சியுடன் ஒப்புக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பேசியுள்ள இலங்கை அதிபர், ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது. ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன என்றார்.
நாட்டிற்காக சண்டையிட்ட வீரர்களை அரசு வேட்டையாடுவதாக எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை நிராக ரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். போர் குற்றங்கள் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நிரபராதிகள் என தெரிய வந்தால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்ப டுவார்கள் என்றார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்