ஹங்கேரி: ஹங்கேரியின் புடாபஸ் நகரில் சர்க்கஸ் நிறுவனத்தில் உள்ள இந்திய யானை ஒன்று வண்ணச்சித்திரம் தீட்டும் காட்சி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் இந்த சர்க்கஸுக்கு 2 வயதுக் குட்டியானையாக வந்த அந்த யானையின் பெயர் சான்ட்ரா ஆகும். தற்போது சான்ட்ராவுக்கு 42 வயதாகிறது. சான்ட்ரா யானை கோடுகளை ஓவியமாக்குவதற்கு தனது தும்பிக்கையையே தூரிகையாக்குகிறது. சான்ட்ரா வரைந்த ஒரு ஓவியம் 150 டாலருக்கு விலை போனது.
யானைகளுக்கு பயிற்சியளித்த ஃப்ளோரியன் ரிக்டர் என்ற பெண்மணி சான்ட்ராவுக்கு தாம் எந்தவித துன்புறுத்தலும் செய்யவில்லை என்றும் அதுவாகவே ஆர்வத்துடன் ஓவியம் கற்றுக்கொண்டுவிட்டது என்றும் கூறியுள்ளார். யானை வரைந்த அழகில் சொக்கிப் போகும் பார்வையாளர்கள் அதை ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர். அப்படித் திரட்டப்படும் தொகை, மலேசியக் காடுகளில் உள்ள யானைகளின் மறுவாழ்வுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இங்குள்ள குதிரைகளுக்கும் ரிக்டர் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்