அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள், அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்’ என வடகொரிய அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.
இதையடுத்து, வடகொரிய அதிபர் விடுத்த அறிக்கை ஒன்றில், ’அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் செயல்படுமானால், ஜப்பான் விரைவில் ஒரு நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகள் அமெரிக்காவுக்கே பேரழிவைத் தரும். பின்னர், வடகொரியாவின் துணிச்சலான நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டியது வரும்” என்றும் கிம் எச்சரித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்