இங்கிலாந்து ராணுவ தரைப்படையில் திருநங்கை ஒருவரை பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. சோலோ அலென் என்ற நபர் 2012ல் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின் அவர் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அலென் பெண்ணாக மாறும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு வழியாக பெண்ணாக மாறிய அலென் தனது பெயரை பென் என மாற்றிக் கொண்டதோடு, தனது அனைத்து சான்றிதழ்களிலும் பெயரை மாற்றியுள்ளார். கடைசியாக தான் பணியாற்றும் ராணுவ அலுவலகத்திலும் பெண்ணாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்து நாட்டிற்கு சேவை செய்வதுதான் எனது ஆர்வம் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை பெண்கள் பணியாற்றும் ராணுவத்தில் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இவர் ராணுவத்தில் இணையும் பட்சத்தில், திருநங்கை ஒருவர் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்