இலங்கை அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், பல்லாயிரம் ஏக்கரில் விளைந்த பயிர்கள் நீரில் மிதக்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யலாம்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை நீடிக்கும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை இன்று வலுவிழந்தது. ஆனால், தற்போது இலங்கை அருகே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால் மிகப்பெரும் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனாலும், இரண்டு நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்