லண்டன்:
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் தமிழ் வார்த்தையான அண்ணா என்ற வார்த்தையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதியில் எப்போதும் பல்வேறு மொழிகளில் இருக்கும் பிரபல வார்த்தை கள் அவற்றின் அர்த்தங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிதாக 70 இந்திய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் அனா என்ற வார்த்தை இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நாணயமான அனாவை குறிக்கும் அர்த்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ், தெலுங்கில் அதிகம் பயன்படுத்தப்படும் அண்ணா என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்ணா என்றால் பெயர்ச்சொல் அதற்கு மூத்த சகோதரர் என்பது அர்த்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று உருது வார்த்தையான அப்பா, அச்சா, பாபு, படா தின், பச்சா, சூர்ய நமஸ்காரம் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுள்ள பெரும்பாலான இந்திய வார்த்தைகள் உறவுமுறைகள், கலாச்சாரம் மற்றும் உணவு முறையை குறிப்பவையாக உள்ளன. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் புதிய வார்த்தைகள் சேர்க்கப்ப டுகின்றன. மேலும் 2017 செப்டம்பர் மாதத்தில் ஆயிரம் புதிய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்