காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள யுரி பகுதியில் ராணுவமுகாம் மீது ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலியாகினர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன், "ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை ஐக்கிய நாடுகளின் சபை கடுமையாக கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் விரைவாக அடையாளம் காணப்பட்டு நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். இரு நாடுகளின் எல்லையோரத்திலும் மக்கள் அமைதியாக வாழ அந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உறுதுணையாக இருக்கும்" என்றார்
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்