சியோல்:
அணு ஆயுதத்தைவிட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தப்போவதாக வெளியிட்ட அறிவிப்பை உலக நாடுகள் வெறும் வார்த்தையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என வடெகாரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் கடந்த மாதம் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவை முற்றிலும் அழித்துவிடப் போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்த வடகொரியாவின் வெளியுற அமைச்சர் ரி யாங் ஹோ பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது எச்சரிக்கையை வெறும் வார்த்தையாக உலக நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என வடகொரியா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் என்னைத் அறிந்த ரி யாங் ஹோ நிச்சயம் சொன்னதை செய்து காட்டுவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்