வாஷிங்டன்:
பிரசவ வலி ஏற்பட்டு நின்றுவிட்டதால் பொறுமையை இழந்த பெண் ஒருவர் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு உடனே வெளியேறுமாறு சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கிய வினோத சம்பவம் அமெரிக்காவில் நடை பெற்றுள்ளது. பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு பிறவி போன்றது. அமெரிக்காவின் உதாவில் உள்ள கெயில் பே என்று பெண் அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் மூன்றாவதாக கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்றிருந்தார். ஆனால் அதற்கு பிரசவ வலி முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் வலி வரும் என காத்திருந்து காத்திருந்து சோர்வ டைந்தார்.
பொறுமை இழந்த அவர் தன்னுடன் பணியாற்றும் நீதிபதியை அணுகி குழந்தை தன் வயிற்றில் இருந்து உடனடியாக வெளியேற சட்டப்பூர்வமான நோட்டீஸ் வழங்க கோரினார். அந்த நீதிபதி லின் டேவிஸ், கெயில் பேயின் கருவறையில் இருப்பவர் என்ற முகவரியிட்டு கையெழுத்திட்ட வெளியேற்ற நோட்டீஸை அனுப்பி னார். இதை அந்த தாய் தனது கருவில் உள்ள குழந்தையிடம் படித்துக் காண்பித்தார்.
இந்த நீதிமன்றத்தின் நோட்டீஸுக்கு மதிப்பளிப்பதாக நினைத்து அந்த சிசு 12 மணிநேரம் கழித்து வெளியே வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்