வாஷிங்டன்: அமெரிக்கா செல்லும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு ஆளாக்கப்படும் முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் விமானப் பயணிகள் லேப்டாப் எடுத்து செல்கின்றனரா என்றும் தீவிரமாக கண்காணிப்பட உள்ளனர்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக எட்டு இஸ்லா மிய நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகள் லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை கொண்டு வரு வதற்கு அமெரிக்கா தடை விதித்தது.
இந்நிலையில் இந்த புதிய நடவடிக்கைகளை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் தினசரி 3 லட்சத்து 25,000 பயணிகளைச் சுமந்து செல்லும், சராசரியாக 2,100 விமானங்கள், 280 விமான நிலையங்களையும், 180 விமான சேவை நிறுவனங்களையும் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்த புதிய விதிகள் குறித்து விளக்கம் அளித்துள்ள லுப்தான்ஸா குழும விமான நிறுவனம் இந்த சோதனையின் போது பயணிகளிடம் செக் இன் கேட் அதாவது உள் நுழையும் வாசலில் வைத்து சிறிய நேர்காணல் நடத்தப்ப டும் என்று கூறியுள்ளது.
எனவே 90 நிமிடங்கள் முன்னதாகவே செக் இன் செய்யுமாறு எகானமி பிரிவு பயணிகளை லுப்தான்ஸா சுவிஸ் ஏர்லைன் கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்று மற்றொரு ஏர்வேஸ் நிறுவனமான கேத்தே பசிபிக் ஏர்வேஸ் அமெரிக்காவிற்கு நேரடி விமானத்தில் புக் செய்யும் பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவே பயணிகள் விமான நிலையம் வந்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்