பாங்காக்:
கடந்தாண்டு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு ரூ.500 கோடி பொருட்செலவில் நாளை நடைபெறவுள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து வருகின்றனர். மன்னருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வரும் அந்நாட்டு மக்கள், கருப்பு உடையணிந்து சலங் லுவாங் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கின்றனர். பலர் இரவில் கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் தலைநகர் பாங்காக்கில் முகாமிட்டுள்ளனர்.
தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக உலகின் பல நாடுகளின் தலைவர்களும் வரவுள்ளனர். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தை 70 ஆண்டுகளாக ஆண்ட மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், உடல்நலக்குறைவால் கடந்தாண்டு அக்டோபர் 13ம் தேதி, 88வது வயதில் காலமாணார். இதற்காக அரண்மனையில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் சதுக்கம் கடந்த ஒராண்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்