ஹூஸ்டன்: அமெரிக்காவில் கால்வாயில் இருந்து இந்திய சிறுமியின் சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். இது 3வயது இந்திய சிறுமியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் வசித்து வருபவர் வெஸ்லே மேத்யூ. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள காப்பகத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தார். அந்த குழந்தைக்கு ஷெரின் மேத்யூ என பெயர் வைத்துள்ளார். தற்போது 3 வயதாகும் ஷெரீனை கடந்த 7ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காணவில்லை.
கடந்த 6ம் தேதி இரவு ஷெரீன் குடிப்பதற்காக பாலை காய்ச்சி மேத்யூ கொடுத்துள்ளார். ஆனால், ஷெரீன் அந்த பாலை முழுவதுமாக குடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த மேத்யூ, ஷெரீனை வீட்டிற்கு அருகே உள்ள மரத்தின் அருகில் நிற்குமாறு கூறி தண்டனை கொடுத்துள்ளார். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சென்று பார்த்தப்போது ஷெரீனை காணவில்லை. ஷெரீனை அவர் பல இடங்களிலுமை் தேடியுள்ளார். எனினும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ரிச்சட்சன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குழந்தை காணாமல் சென்று பல மணி நேரம் கழித்து புகார் செய்ததால் மேத்யூவை போலீசார் கைது செய்தனர். பின்னர் பிணைத்தொகை செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார்.
சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் உள்ள சிறிய கால்வாயில் இருந்து 3 வயது குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இது காணாமல் சென்ற ஷெரீனாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இறந்த குழந்தை யார் என்பதும் அடையாளம் காணப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறப்பிற்கான காரணம் மற்றும் குழந்தை யார் என அடையாளம் காணப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்