அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டி தான் வரு வேன். என் பாரம்பரிய உடையை அணிய நீங்கள் ஏன் மறுக்கி றீர்கள்..? என சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.
இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ் வார்த்தைகளை தவிர்த்து பிற மொழி சொற்களை பயன்படுத்த விரும்பாத ஒரே தமிழன். ஈழத்தமிழரான முல்லை மண்ணின் வாரிசு ரணேந்திரன் மட்டுமே. இவரை கர்வமாக சொல்லலாம் வேட்டி கட்டிய தமிழன் என்று.இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.
தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில்,தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப் பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து அகரன் ஐ உருவாக்கியுள்ளேன். இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும். இதை க்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிட முடியும்.
ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத் திறன் கொண்டதென ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்