ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர், ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஆஸ்கார் விருது வென்ற படங்களைத் தயாரித்த இவர்மீது பல நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு இளம் மாடலை பாலியல் ரீதியாகத் தனது ஹோட்டல் அறைக்கு அழைக்கும் ஆடியோ ஒன்று வெளியானது, ஹாலி வுட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதன் பின்னர், நடிகைகள் சிலர் தாங்களும் இதே போன்று ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கபட்டதாகத் தெரிவித்தனர்.
அந்த வரிசையில், ஹாலிவுட் பிரபல நடிகைகளான பால்ட்ரோ மற்றும் ஏஞ்சலினா ஜூலி ஆகியோரும் அவர் மீது அதே குற்றச்சாட்டை வைத்துள்ளனர். பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர்கள் இதைத் தெரிவித்தனர். பால்ட்ரோ, ’எனது 22 வயத்தில் வெய்ன்ஸ்டீன் தயாரித்த படத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, தனது ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். எல்லா நடிகைகளிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொள்வார்” என்றார்.
இதுகுறித்து அவர் தனது அப்போதைய காதலனும் பிரபல ஹாலிவுட் நடிகருமான பிராட் பிட்டிடம் கூறியாதாகவும், அவர் வெயின்ஸ்டெயினைக் கண்டித்த பிறகு, நடந்ததை வேறு யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று, பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். “எனது இளமைக் காலத்தில், ஹார்வே வெயின்ஸ்டெயினிடம் மோசமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அதனால், அவருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்யவில்லை. அவருடன் பணியாற்றும் நடிகை களையும் எச்சரிக்கை செய்திருக்கிறேன். பெண்களிடம் இதுபோன்ற செயல்கள் எந்தத் துறையாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் ஏற்றுகொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்