ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிகமோசமானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது கடந்த 2015-ல் ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தைத்தான் ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப் ‘ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே மிகமோசமானது. அந்த ஒப்பந்தத்தை என்னால் அங்கீகரிக்க முடியாது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வுசெய்து 60 நாள்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பிறகு பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்
ஈரான் அணுஆயுதத்தைத் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தோழமை நாடுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை நாடுகளுடன் இணைந்து முழுமுயற்சி எடுக்கப்படும். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மொத்தமாக ரத்து செய்யப்படும்’ என்று பேசினார். ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்