அபித்ஜான்: மேற்கு ஆப்பிரிக்காவில் ஐவரி கோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் ஃபிரெஞ்சு ராணுவத்தினருக்கு தேவையாக பொருட்களுடன் அபித்ஜான் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் உள்ள கடலில் விழுந்து விமானம் நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். போர்ட் பவுட்டிற்கு அருகே வந்தபோது கனமழை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விபத்து குறித்து மீட்கப்பட்டவர்களிடம் அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்