"கால நிலை மாற்றத்தினால் சிக்கலுக்கு உட்பட்டுள்ள உணவு உற்பத்திற்கு புத்துயிர் கொடுத்து அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு, பேதங்களை மறந்து அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்," என்று தனது உரையில் அவர் கேட்டுக் கொண்டார்.
2018ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்."அந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்தி உபகரணங்களுக்கு அடுத்த ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.
கைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும். தனியாருக்குரிய விவசாய காணிகளில் உரிமையாளரால் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், அக்காணியில் வேறொருவர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.அதில் காணி உரிமை தொடர்பாக எந்த மாற்றமும் இராது. இதற்கேற்ப சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வரு கின்றது. " என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.