மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள சவுதி அரசர் தமக்கு பணிவிடைகள் செய்வதற்காக 1500 பணியாளர்களை உடன் அழைத்து சென்றுள்ளார். மாஸ்கோவிற்கு 4 நாள் பயணமாக வந்துள்ள சல்மான் பில் அப்துல்லாஸிஸ் பிரத்யேக விமானத்தில் தனது தங்க எஸ்கலேட்டரில் கீழே இறங்கி வந்தார். அப்போது எஸ்கலேட்டர் பாதியிலேயே நின்று விட்டதால் அவர் நடந்தே கீழே இறங்க வேண்டியியதாயிற்று. இதனிடையே ரிச்ஸ் மற்றும் போர்ட் சீசன் ஆகிய இரண்டு ஆடம்பர விடுதிகளையும் முன்பதிவு செய்துள்ள அரசர் விடுதி பணியாளர்களை மாற்றிவிட்டு தமக்கு ஏற்றவாறு பணிவிடைகள் செய்வதில் அனுபவமுள்ள 1500 பணியாளர்களை சவுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ரஷ்யா அழைத்து வந்துள்ளார்.
மேலும் இவர்களுக்கு தேவையான 850 கிலோ உணவுப்பொருட்களை சவுதியில் இருந்து விமானம் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது. இதேபோல் தனக்கு தேவையான சிவப்பு கம்பளம் முதல் பர்னிச்சர், நாற்காலிகள் வரை அனைத்தையும் விமானம் மூலம் சவுதி அரசர் எடுத்து வந்துள்ளார். ரஷ்யாவில் 4 நாட்கள் தங்குவதற்கு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20 கோடியை சவுதி அரசர் செலவிட்டுள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்