சீயோல்:
வடகொரியாவை மிரட்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார். அவரது செயலுக்கு உரிய விலை கொடுக்க நேரிடும் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் ெதரிவித்துள்ளார். ஐநா மற்றும் உலக நாடுகள் எச்சரிக்கையை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐநா ஆண்டுக்கூட்டத்தில் முதன் முறையாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,” உலக நாடுகள் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால் வடகொரியா இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படும்” என்று ஆவேசமாக பேசினார். மேலும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் ஒரு ராக்கெட் மனிதர் என்றும் விமர்சனம் செய்தார்.
இது வடகொரியாவுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது. இந்த நிலையில் டிரம்ப் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் மிக உயர்ந்த அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் மனிதரை தடுத்து நிறுத்தும் அதிகாரம் கொண்டவராக நான் மாறுவேன். வடகொரியாவை அழிப்பேன் என்ற அவரது மிரட்டல் பேச்சுக்கு உரியவிலை கொடுக்க வேண்டியது வரும். இறையாண்மை பெற்ற ஒரு நாட்டை முற்றிலும் அழிப்பேன் என்று ஐநா சபையில் முறையற்ற முறையில் பேசிய அமெரிக்க அதிபர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டார். அவரது பேச்சுக்கள் என்னை பயமுறுத்தவோ அல்லது தடுத்து நிறுத்தவோ இல்லை. மாறாக வலிமைப்படுத்தி உள்ளன. நான் சரியான பாதையை தேர்வு செய்துள்ளதை தெரிவிக்கின்றன. எனவே நான் கடைசி வரை இதே பாதையைத்தான் பின்பற்றுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பைத்தியக்காரன்
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் பேச்சு குறித்து அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: வடகொரியாவின் கிம் ஜோங் உன் பைத்தியக்காரன். மக்கள் பட்டினி கிடப்பதையும், பலியாவதையும் அவர் பொருட்படுத்த மாட்டார். அவரைப்போல் ஒரு நபரை இதற்கு முன் நான் அறிந்தது இல்லை” என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்