நியூயார்க்
வடகொரியாவை அழித்துவிடுவோம் என்ற ஐ.நா.சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரைக்கு ஜப்பான் வரவேற்பும், கியூபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அணு ஆயுத சோதனை நடத்தி உலகை அச்சுறுத்தி வரும் வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டிரம்ப் ஆற்றிய உரையை வரவேற்பதாக ஜப்பான் நாட்டு தலைமை அமைச்சரவை செயலாளர் யோசிகிஹைட் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்பின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கியூபா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிகாரபூர்வ தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டுள்ளது. வடகொரியா அடுத்தடுத்து நடத்தி வரும் அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நட்பு நாடான சீனா வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வடகொரியாவின் அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை சீனாவும், ரஷ்யா வும் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்