அமெரிக்க அதிபர் மீது தவறான குற்றச்சாட்டை கூறியதற்காக ஹாரிபாட்டார் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் மன்னிப்புக் கோரியுள்ளார். வெள்ளை மாளிகையில் அண்மையில் விழா ஒன்று நடந்தது. அங்கு மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவனுடன் கைகுலுக்க டிரம்ப் மறுப்புத் தெரிவித்ததாக ரௌலிங் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், டிரம்ப் அந்த சிறுவனைப் புறக்கணிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக மாண்டி என்ற அந்த சிறுவனின் தாயாரான கெல்லி, தமது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், டிரம்ப் தனது மகனைப் புறக்கணிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவருடன் கைகுலுக்க தனது மகன் மாண்டி முயற்சிகூட செய்ய வில்லை. இந்த தகவலை ரௌலிங்கிடம் யாரேனும் கொண்டு சேருங்கள் என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், டிரம்ப் மீது தவறான குற்றச்சாட்டை கூறியதற்காக ஜே.கே.ரௌலிங் மன்னிப்பு கோரியிருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட் டுள்ள அவர், அந்த சிறுவனுடன் டிரம்ப் கைகுலுக்கியதை நம்பத் தகுந்த நபர்கள் மூலம் தற்போது அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுவன் அல்லது அவரது குடும்பத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் ஜே.கே.ரௌலிங் பதிவிட்டுள் ளார். உலக அளவில் புகழ்பெற்ற ஹாரிபாட்டார் வரிசை நாவல்களை எழுதியவர் ஜே.கே.ரௌலிங் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்