வடகொரியா மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை சோதனையால் உலகநாடுகள் கடும் பீதியில் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவுக்கு தீராத தலைவலி யாக உள்ளது. சமீபத்தில் முடிந்த வடகொரியாவின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் எந்த மூலையில் இருக்கும் இலக்கையும் எளிதாக தாக்கி அழிக்கக்கூடியது என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய அணு ஆயுத சோதனை என்ற பெயரில் வட கொரியா தினம், தினம் புதுப்புது குடைச்சல்களை துவக்கிக் கொண்டே இருந்தால், அதை இனியும் அமெரிக்கா பொறுப்பதாக இல்லை. உடனடியாகப் போரைத் துவக்கி உலக வரைபடத்தில் வட கொரியா என்ற ஒரு தேசத்தையே இல்லாமல் செய்துவிடும் நிலையை உருவாக்கவே வடகொரொயா எங்களைச் சீண்டிப் பார்க்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் டிரம்ப் அமைச்சரவையின் சட்டமன்ற உறுப்பினராகத் திகழும் லின்ட்சே கிர ஹாம் கூறுகையில், வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகளை மட்டுமல்ல வடகொரியாவையே முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விட முடியும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்