வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ அழைப்பில் இருக்கும் போதே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியை சேர்ந்தவர் ரிசிலா பின்டே வாசர்(22). இவர் 2012 ஆம் ஆண்டிலிருந்து மாடலாக இருக்கிறார். இவருக்கு திருமண மாகி 3 வயதில் குழந்தை உள்ளது. மேலும் இவர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது கணவருடன் கடந்த திங்கட்கிழமை வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கு மிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அது சண்டையாக மாறி, திடேரென முடிவெடுத்த ரிசிலா கணவர் வீடியோ அழைப்பில் இருக்கும் போதே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அவர் டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் முயற்சி பலனளிக்கவில்லை. இது தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்