இலங்கை அதிபரும், பிரதமரும் தங்கள் மாவட்டங்களை மேம்படுத்திக் கொண்டு எங்களைக் கூலி ஆட்களை போன்று பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நேற்று உரை யாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். 14 மாதங்களுக்குப் பின்னர் மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. இவ்வாறு தொடர்ந்து சென்றால் இந்த கூட்டத்தையும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவே வந்து நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இந்த பகுதி மக்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள். அத்துடன், கடந்த அரசாங்கத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ். மாவட்டத்திலிருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தேசியப் பட்டியல் ஊடாகவும், ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இங்கிருந்து தெரிவு செய்யப்படுபவர்களின் கருத்துக்களைக் கட்டாயம் கேட்கவேண்டும். இதேவேளை, அதிபர் மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் சர்வாதிகாரம் செலுத்துவார் என்றால், நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்