ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார். A.R.Rahman தனது சமூக வலைத்தளங்களில் இவ்வாறு ஒரு இசைக்கலைஞரை (instrumental cover) பகிர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். 40 மில்லியனிற்கும் மேற்பட்டோர் A.R.Rahman இன் சமூக வலைத்தளத்தில் உள்ளனர். அவர் ஒலிவியாவின் வீணை இசையினை தெரியப்படுத்தி யுள்ளமை இசைத்துறையில் ஒலிவியாவுக்கான வாய்ப்பை எளிதாக நிச்சயம் பெற்றுக்கொடுக்கும். A.R.Rahman இசையில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் பிரபலமான “சரட்டு வண்டில” என்ற பாடல்தான் அது. ஜெர்மனில் பிறந்த ஈழத்தமிழரான ஒலிவியா தனபாலசிங்கம் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை என்பவற்றினை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். ஒலிவியாவின் இந்த சாதனைக்கு A.R.Rahman கொடுத்த இந்த அந்தஸ்து ஊடகங்களிலும் இணையங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஒலிவியாவும் A.R.Rahman தனக்கு கொடுத்த இந்த அந்தஸ்துக்கும், தனது இசையை பகிர்ந்து கொண்டதற்கும் பேஸ்புக் வழி நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்