யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வைத்து நேற்று போலீஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் போராளி ஒருவர் சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரி பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், இச் சம்பவத்துடன், தொடர்புடைய மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு, சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட் டுள்ள நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்துள்ளது. போலீஸ் சிறப்பு படையினர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் உதவிகளும் பெறப்படும் என்றும் அவர் கூறினார். விரைவில் குற்றச் செயல்களை குறைப்பதுடன் பதற்ற நிலைமை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என அவர் மேலும் தெரிவித்துள் ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்