லண்டன் வேற்றுகிரகவாசிகளை நாம் ஒரு வேளை கண்டுபிடித்தாலும் கூட அவர்களை நாம் தொடர்பு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் நமது பூமியைக் கைப்பற்றி விடும் அபாயம் உள்ளதாக பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வுகளில் தவறில்லை. அதேசமயம், நாம் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பது சரியான செயல் அல்ல. அது நமது அழிவுக்கு வித்திட்டு விடும் என்றும் கூறியுள்ளார் ஹாக்கிங். இதற்கு முன்பும் கூட அவர் இதே எச்சரிக்கையை விடுத்திருந்தார். விஞ்ஞானி கள் கிளீஸ் 832சி (Gliese 832c) என்ற கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் அவர்களைத் தொடர்பு கொண்டால் நமக்குத்தான் சிக்கல் என்று ஹாக்கிங் எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், வேற்றுகிரகவாசிகளை நாம் தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம். ஒரு வேளை தொடர்பு கொண்டால் பிறகு மனித இனமே பூண்டோடு அழிந்து விடும். அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள். கண்டிப்பாக ஒரு நாள் வேற்றுகிரகவாசிகளிடமிருந்து நமக்கு சிக்னல் வரும். ஆனால் அதற்குப் பதிலளிப்பதில் நாம் மிகுந்த புத்திசாலித்தனத்தோடு செயல்பட வேண்டும். வேற்றுகிரகவாசிகள் நம்மை விட புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்களைத் தொடர்பு கொள்வது என்பது, கொலம்பஸை எதிர் கொண்ட செவ்விந்தியர்களின் கதை போல. அந்தக் கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகுந்த கவனமாக இருந்தால் மட்டுமே அழிவைத் தவிர்க்க முடியும். நம்மைப் போலத்தான் வேற்றுகிரகவாசிகளும் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப் படுத்தவே அவர்கள் முயல்வார்கள் என்று கூறியுள்ளார் ஹாக்கிங். கடந்த 2010ம் ஆண்டு முதலே இந்த எச்சரிக்கையைக் கொடுத்து வருகிறார் ஹாக்கிங். ஆரம்பத்தில் மனிதர்கள் மட்டும்தான் இருப்பதாக நான் கரு தினேன். ஆனால் இப்போது வேற்றுகிரகவாசிகளும் இருப்பதாக நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார் ஹாக்கிங். ஹாக்கிங்கே சொல்கிறார்.. எதுக்கும் கவனமாவே இருப்போம்ய்யா!
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்