காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் ஈராக் நாட்டு தூதரகம் உள்ளது. வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட பல முக்கிய அரசு அலு வலகங்கள் உள்ளதால் உச்ச கட்ட பாதுகாப்பு இந்த பகுதியில் இருக்கும். இந்த நிலையில், பாதுகாப்புகளை மீறி ஈராக் தூதரக அலுவலகத்திற்கு வெளியே கார் வெடி குண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை. இதையடுத்து, துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் கட்டிடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே, துப்பாக்கிச்சண்டை நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரி விக்கின்றன. இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் இது போன்ற தாக்குதல்களை வழக்கமாக தலீபான் மற் றும் ஐ.எஸ் இயக்கங்கள் முன்னெடுத்து வருவது நினைவு கூறத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்