பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்குத் தகுந்த ஊதியம் வழங்க வலிமையான கொள்கைகள் வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (சிஓஓ) ஷெரில் சாண்ட்பர்க் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''சிறு வயது பெண்கள் கூட தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். அவர்கள் யார், என்னவாகப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தும் தீர்மானிக்கப்பட வேண்டும்.பாலினத்தை வைத்து தலைமைப் பொறுப்புகளுக்கு வரவேண்டியவர்கள் தீர்மானிக்கப்படக் கூடாது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் இருக்கும் ஊதிய வித்தியாசம் சரி செய்யப்பட வேண்டும். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமான அளவில் முன் னேறி செல்ல முடியாமல் அல்லது ஊதிய உயர்வுகோர முடியாத அளவு தங்களின் திறன்களை குறைத்து மதிப்பிடுகின்றனர். பெண்களுக்கு நல்ல முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பொது மற்றும் கார்ப்பரேட் கொள்கைகள் அவ்வாறு அமைய வேண்டும். ஆண்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பெண்களும் விண்ணப்பிக்கின்றனர். ஆண்கள் வேலை செய்யும் அதே நேரம் பெண்களும் வேலை செய்கின்றனர். அதுவே இதற்கு பதிலாகவும் அமைந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்