பனாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில், அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி யுள்ளது. உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, பனாமா லீக்ஸ் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. நவாஸ் ஷெரீப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின்போது கடந்த மே மாதம் ‘கூட்டு விசாரணைக் குழு’ ஒன்று நீதிமன்றத்தால் விசாரணைக்காக உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டு விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இன்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது க்ரிமினல் வழக்கு பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்