அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஜி-20 மாநாட்டின்போது ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர் என்கிற தகவல் சர்ச் சையை அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், ரஷ்ய அதிபர் புதினின் தலையீடு இருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின்மீது விசாரணை நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர் என்கிற தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜெர்மனியில் ஜி-20 மாநாடு நடைபெற்றபோது, அதிகாரபூர்வமாக ட்ரம்ப்பும் புதினும் அலுவல்ரீதியாக சந்தித்துக்கொண்டனர். இந்நிலையில், அடுத்து இரண்டாவது முறையாக ட்ரம்ப்பும் புதினும் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர் என்ற தகவல் பரவியது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ட்ரம்ப்- புதின் இரண்டாவது முறையாக சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பு அலுவல் ரீதியானதாக இல்லா மல் மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு ஆகும். இது ரகசிய சந்திப்பு இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் எதுகுறித்து விவாதித் தார்கள், எவ்வளவு நேரம் விவாதித்தார்கள் என்பது குறித்தத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்