கொழும்பு,
போர்க்குற்றங்களை இழைத்த ஸ்ரீலங்கா படையினரை நீதியின் முன் நிறுத்தும் விவவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் தென்படவில்லை என மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி பென் எமர்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்றும் விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளதாக, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை ஸ்ரீலங்கா அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பின்னர் மனித உரிமைகள் பேரவையினால் ஸ்ரீலங்காவிற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு, நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை எனவும் வலியுறுத்தினார்.