சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜிலின் நகரத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.கடந்த வியாழக்கிழமை ஜிலின் நகரத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தால் தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரத்தை விட்டு இடம்பெயர வேண்டியதாக நகரின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சேறு, குப்பைகள், பழுதான பாலங்கள் மற்றும் தொலைத்தொடர்பு, மின் இணைப்புகள் என அனைத்தையும் சரி செய்யும் பணியில் சுமார் 32,360 தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்