கொழும்பு, அண்மைய நாட்களாக இலங்கையில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நடந்த இரு வேறு தாக்கு தல்கள், ரகசிய ஆட்சேர்ப்புப் பணிகள், தமிழகத்தில் செய்யப்படும் அரசியல் நகர்வுகள், புலம் பெயர் நாடுகளில் நிதி திரட்டும் முயற்சிகள் என பல்வேறு நடவடிக்கைகள் இலங்கை அரசை அச்சமடையச் செய்திருக்கின்றன. மேலும், இரு நாட்களுக்கு முன்பாக நோர்வே அரசு பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 விழுக்காடு உண்மை எனவும், அவருக்கு ஆதரவாக 14 நாடுகள் உள்ளன என்ற தகவலையும் உறுதிப்பட பகிரங்கப்படுத்தியிருந்தது. இந்தியாவின் ரா அமைப்பு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் விழிப் பாக இருக்குமாறு இலங்கை அரசை எச்சரித்தும் இருந்தது. இதனையே இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் முப்படைத் தளபதி கோத்தபாயாவும் கடுமையாக எச்சரித்திருந்தனர். இதனிடையே விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி, சூசை போர்முனைகளில் பயன்படுத்திய படகு ஒன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பை ஊடறுத்துச் சென்றதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடற்புலிகளுக்கு சொந்தமான இளம்தாரை என்ற படகு எட்டு வருடங்களுக்குப் பின்னர் தற்போது செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட் டுள்ளது. இலங்கை கடற்படையினரின் அனுமதியின்றி 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு கடலில் இந்தப் படகு பயணித்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இந்த படகை வைத்தே கடற்களமுனையில் சூசை போருக்கான கட்டளைகளை பிறப்பித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித் துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்