img
img

செனேகலில் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மோதல்; மைதானம் இடிந்து 8 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 16 ஜூலை 2017 14:19:36

img

டாகர், செனேகல் நாட்டில் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ஏற்பட்ட நெருக்கடியில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்கா நாடான செனேகல் தலைநகரான டாகரில் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இப்போட்டி டெம்பா டியோப் என்ற கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. உள்ளூர் அணிகள் பங்கு பெற்ற இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். போட்டிகளைக் கட்டியது. ரசிகர்கள் ஆட்டம் பாட் டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு அணி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை யருவர் தாக்கி கொண்டனர். அவர்களை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முயன்றதால் கூட்ட நெரி சல் ஏற்பட்டது. அப்போது மைதானத்தின் சுவர் இடிந்து ரசிகர்கள் மீது விழுந்து அமுக்கியது. இச்சம்பவத்தில் 8 பேர் உடல் நசுங்கி அதே இடத்தில் பலி யாகினர். 49 பேர் காயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ் பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img