கேமரூன் நாட்டு எல்லையில் மீன் பிடிக்க சென்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த 97 மீனவர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள பகாசி என்ற தீபகற்ப பகுதியை கடந்த 2008-ம் ஆண்டு கேம ரூன் நாட்டிற்கு நைஜீரியா விட்டுக்கொடுத்தது. முன்னதாக, இந்த தீபகற்பத்தில் நைஜீரியா நாட்டினர் சுதந்திரமாக மீன் பிடித்து வந்துள்ளனர்.ஆனால், கேமரூன் நாட்டின் கட்டுப்பாட்டில் பகாசி சென்ற நாள் முதல் இப்பகுதியில் மீன் பிடிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கேமரூன் விதித்தது.இதனை தொடர்ந்து தீபகற்பத்தில் மீன் பிடிக்க வரும் நைஜீ ரியா மீனவர்களுக்கு தலா 300 டாலர் கட்டணத்தை கேமரூன் நிர்ணயம் செய்தது. கேமரூன் நாட்டின் இந்த விதிகளை மீறி கட்டணம் செலுத்தாமல் நைஜீரியா மீனவர்கள் மீன் பிடித்துள்ளனர்.இந்நிலையில், கடந்த வாரம் கட்டணம் செலுத்தாமல் மீன் பிடிக்க சென்ற 97 மீனவர்களை கேமரூன் ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளது. இத்தாக்குதலில் இருந்து தப்பிய சில மீனவர்கள் நைஜீரியா அரசிடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால், இத்தாக்குதல் தொடர்பாக கேரூன் அரசு இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடாத நிலையில் 97 மீனவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்