யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த பள்ளி மாணவி வித்தியா கொலை தொடர்பில், முக்கிய போலீஸ் உயர் அதிகாரி இன்று கைது செய்யப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட தலைமை அதிகாரியாக செயல்பட்ட லலித் ஜயசிங்க என்பவரே அவர். வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விடுவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்படவுள்ளார். குற்ற விசாரணை ஆணைய விசாரணையை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வௌியிட்டது. 2015, மே மாதம் 13ஆம் தேதி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார். கொலைச் சம்பவத்தின் முக்கிய புள்ளியான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்